Saturday 28 November 2015

நிறை மாத கர்ப்பிணியின் கர்ப்பப்பையை வெட்டி எடுத்த தோழியால் பரபரப்பு!…


நிறை மாத கர்ப்பிணியின் கர்ப்பப்பையை வெட்டி எடுத்த தோழியால் பரபரப்பு!…

நியூயார்க்:-அமெரிக்காவில், நியூயார்க் நகரில் பிரான்க்ஸ் என்ற பகுதியில் உள்ள வேக்பீல்ட் ஏரியா அபார்ட்மெண்டில், ஒரு பெண் மற்றும் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து, மிரண்டு போன அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவலளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சத்தம் கேட்ட 2-வது மாடிக்கு விரைந்து சென்றனர். அப்போது, மாடியில் இருந்த படுக்கையறை கதவருகே, நிறைமாத கர்ப்பிணி ஒருவர் ரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அருகிலுள்ள ஹாலில் கொல்லப்பட்ட பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்த தொப்புள் கொடியும், குளியலறைக்கு அருகே ஒரு கத்தியும் இருந்தது. உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீசார் அந்த வீட்டின் உரிமையாளரான அஷ்லீக் வேட்(22) என்ற பெண்ணைக் கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட அஷ்லீக்கோ, அது என்னுடைய குழந்தை என்று பித்துப்பிடித்தது போல் அலறினார். பிரேத பரிசோதனை மற்றும் விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, கொலை செய்யப்பட்ட ஏஞ்ஜலிக் சுட்டன், 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இவரது குழந்தைப் பருவ தோழியான அஷ்லீக் வேட் அண்மைக்காலமாக அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்துடன், தான் கர்ப்பமாக இருப்பதாக பாசாங்கு செய்து, அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங்கில் தன் வயிற்றில் குழந்தை இருப்பதைப் போன்ற புகைப்படத்தையும் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இதை பெயர் தெரியாத அஷ்லீக்கின் ஆண் நண்பரும் ஷேர் செய்திருந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தன் வீட்டிற்கு கர்ப்பிணியான ஏஞ்ஜலிக்கை அழைத்து வந்து, அவரது மிகக் கொடூரமான முறையில் 22 முறை கத்தியால் குத்தி ஏஞ்ஜலிக்கின் கர்ப்பப்பையை வெட்டி எடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த கொடூரத்தால் பிறந்த குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஜெனசிஸ் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தை தற்போது குழந்தைகள் காப்பகத்தில் உள்ளது. அஷ்லீக்கை மனநல பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

2010க்கு பின் நடந்த மோசமான விமான விபத்துகள்:

இந்தோனேஷியாவில் இருந்து54 பேருடன் சென்ற விமானம் மலையில் மோதி மாயமானது. இதற்கு முன் நடந்த கோரமான விமான விபத்துக்கள்:

* 2010 , மே 12: லிபிய தலைநகர் திரிபோலியில் ஏர்பஸ் ஏ330யில் விபத்து ஏற்பட்டு 103 பேர் பலி.
* 2010, மே 22: ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானம், மங்களூரு விமான நிலைய ஓடு பாதையை கடந்து ஓடி விபத்துக்குள்ளானதில் 158 பேர் பலி.
* 2010, ஜூலை 28: மோசமான வானிலை காரணமாக, பாகிஸ்தானின் ஏர்புளூ விமானம், இஸ்லாமா பாத்துக்கு வடகிழக்கு மலைப்பகுதியில் விபத்துக்கு உள்ளாகி, 152 பேர் பலி.
* 2014, மார்ச் 8: 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து -பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் பலி.
* 2014, ஜூலை 17: ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானம் ரஷ்ய எல்லை யருகே சுட்டு வீழ்த்தப்பட்டதில் விமானத்திலிருந்த 298 பேர் பலி.
* 2014, ஜூலை 24: அல்ஜீரியாவிலிருந்து கிளம்பிய விமானம் மாலி பாலைவனத்தின் வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 118 பேர் பலி.
* 2014, டிச.28: இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி 162 பேர் பலி.
* 2015, மார்ச் 24: தெற்கு பிரான்ஸ் பகுதியில் ஜெர்மன்விங்ஸ் ஏ320 விமானம் விபத்துக்கு
உள்ளானதில் 150 பேர் பலி.


வீட்டு வேலை செய்பவருக்கு ரூ.9000 சம்பளம்
புதுடில்லி : வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு மாதம் ரூ.9000 சம்பளமும், ஆண்டுக்கு 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையும், பிரசவ விடுப்பும் வழங்க வகை செய்யும் வகையில் தொழிலாளர் கொள்கை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வயதான வீட்டு வேலைக்கார பெண்களுக்கு உதவுகிற விதத்திலும் ஒரு திட்டம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு முன் வைக்கப்பட்டுள்ளது. வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



பெட்ரோலிய நிறுவனத்தால் இரட்டிப்பு லாபம்

புதுடில்லி: பாரத் பெட்ரோலியம் நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் நிகர லாபமாக 2,376 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. ஆனால் கடந்த 2014ம் ஆண்டு இதே மாதங்களில் இந் நிறுவனத்திற்கு 1216.26 கோடி ரூபாய் நிகர லாபமாக கிடைத்தது. உற்பத்தி மூலமாக ஒவ்வொரு பாரல் கச்சா எண்ணெயிலிருந்தும் இந்த ஆண்டு 8.55 அமெரிக்க டாலர் லாபமாக கிடைத்தது. சென்ற ஆண்டு 3.38 அமெரிக்க டாலர் மட்டும் தான் கிடைத்தது. இருப்பு லாபமாக ரூ 587 கோடி வரை இந் நிறுவனம் ஈட்டியுள்ளது.


சமயல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் மூலமாக இந்த வருடம் பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. சென்ற வருடம் சமையல் எரிவாயு மண்ணெண்ணெய் உற்பத்தியில் ரூ 503 கோடி வரை இந் நிறுவனம் நஷ்டம் அடைந்தது. இத்தனைக்கும் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விற்று முதல் இந்தாண்டு ரூ15,000 கோடி வரை குறைந்துள்ளது.


இனி வரும் நான்கு ஆண்டுகளில் ரூ 30,000 கோடி வரை முதலீடு செய்ய பாரத் பெட்ரோலியம் முடிவு செய்துள்ளது. இதில் ரூ 10,000 கோடி வரை கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை விரிவு படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் தற்போதைய உற்பத்தியான 9.5 மில்லியன் டன்களிலிருந்து 15.5 மில்லியன் டன்கள் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அம்பானியை விட திருப்பதி ஏழுமலையான் சொத்து அதிகம்: இந்திய கோவில்களில் 22 ஆயிரம் டன் தங்கம் கையிருப்பு

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள, ஏழுமலையான் கோவிலின் மொத்த சொத்து மதிப்பு, நாட்டின் நம்பர் - 1 கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை விட அதிகம் என தெரியவந்துள்ளது. தவிர, அமெரிக்காவின் மொத்த தங்கக் கையிருப்பை விட, நம் நாட்டின் கோவில்களில் உள்ள, மொத்த தங்கக் கையிருப்பின் அளவு, பலமடங்கு அதிகம்.

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும், இந்த கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், நேர்த்திக்கடனை நிறைவேற்ற, தங்கம், வெள்ளியால் ஆன ஆபரணங்கள், பணம் மற்றும் இதர பொருட்களை காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம். இது தவிர, கோவிலுக்கு நன்கொடையாகவும் பணம், தங்கம், மற்றும் வெள்ளி ஆபரணங்கள் வருகின்றன.

கடந்த, 2013 - 14ம் ஆண்டு கோவிலின் மொத்த சொத்து மதிப்பு குறித்த கணக்கு தாக்கல் செய்த விவரங்களின் அடிப்படையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, 1.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளது தெரியவந்துள்ளது.

இது, நாட்டின் பிரபல தொழில் அதிபரும், இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் உள்ள மொத்த சொத்துகளின் மதிப்பு, 1.29 லட்சம் கோடி ரூபாய்.இதேபோல், நாட்டில் உள்ள, வேறு நான்கு முக்கிய கோவில்களின் சொத்து மதிப்பு, வருவாய் பற்றிய தகவல்கள் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவில், மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில், உ.பி.,யில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ஆகியவற்றில், பக்தர்கள் செலுத்தும் காணிக்கையின் மூலம், ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள மொத்த தங்கத்தின் அளவு, 22 ஆயிரம் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. இது, வேறெந்த நாட்டிலும் உள்ள மொத்த தங்கக் கையிருப்பின் அளவை விட பல மடங்கு அதிகம். அமெரிக்காவின் மொத்த தங்கக் கையிருப்பு, 8,133.5 டன். இந்தியாவின் மொத்த தங்கக் கையிருப்பு, 557.7 டன். ஆனால், இந்திய கோவில்களில் உள்ள மொத்த தங்கக் கையிருப்பு, 22 ஆயிரம் டன்; இதன் மொத்த மதிப்பு, 50 லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி கோவிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களின் மொத்த மதிப்பு, 60,115 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இது, கோவிலின் மொத்த சொத்து மதிப்பில், 46 சதவீதம். தவிர, கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் மதிப்பு, 43,508 கோடி ரூபாய் எனவும், 9,873.55 கோடி ரூபாய், வங்கிகளில் வைப்புத் தொகையாகவும், இதர வகையில், 18,748 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஷீரடி சாய்பாபா கோவிலின் மொத்த சொத்து மதிப்பு, 1,868 கோடி ரூபாய் என்றும், சித்தி விநாயகர் கோவிலின் சொத்து மதிப்பு, 306 கோடி ரூபாய் என்றும், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு, 71.34 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த கோவில்களில், ஆண்டுதோறும், பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மற்றும் பிற வகைகளில் கிடைக்கும் வருவாய் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவின் அனைத்து கோவில்களிலும் உள்ள மொத்த தங்கத்தை, நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளித்தால், ஒவ்வொரு நபருக்கும் தலா, 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என, கூறப்படுகிறது

லீவ்' கேட்டவரின் வேலை காலி!

ஷில்லாங் : பிரசவ கால விடுமுறை கேட்ட, பெண் டாக்டரை,மருத்துவமனை நிர்வாகம் வேலையை விட்டு நீக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின் ஷில்லாங்கில், கார்டன் ராபர்ட் மருத்துவ
மனை உள்ளது. சர்ச் நிர்வாகத்தின் கீழ், இந்த மருத்துவமனை செயல்படுகிறது. இதில், கடந்த ஐந்து ஆண்டுகளாக பல் டாக்டராக பணிபுரிந்து வந்தார், ரேச்சல். இவர், சமீபத்தில் கர்ப்பமடைந்தார். இதையடுத்து, ஒன்பது மாத விடுமுறை கோரி, மருத்துவமனை நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்தார்.

இதை பரிசீலித்த மருத்துவமனை நிர்வாகம், ரேச்சலை, வேலையை விட்டு, 'டிஸ்மிஸ்' செய்தது. ரேச்சல் வாங்கியிருந்த சம்பள முன் பணத்தையும், உடனடியாக திரும்ப செலுத்தும்படி உத்தரவிட்டது.

இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:ரேச்சல், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர். ஒப்பந்தத்தில், பிரசவ கால விடுமுறை தொடர்பாக எந்த விதிமுறையும் இடம்பெறவில்லை; இதற்காக வருந்துகிறோம். அளவுக்கு அதிகமான விடுமுறைக்கு அனுமதியில்லை என்பதால், ரேச்சல், பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எங்கள் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களின் பணிக்காலம், ஓராண்டு ஒப்பந்த அடிப்படையிலானது. ஒப்பந்தம் முடிந்ததும், தேவைப்பட்டால். மீண்டும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்போம்.

இதுபோன்ற நடைமுறையில், ஒன்பது மாத விடுமுறை, ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மிக நீண்ட நாட்கள் விடுமுறையில் இருந்தால், சம்பந்தப்பட்டோரின் பணி, தானாகவே பறிபோய் விடும். ரேச்சலுக்கு பிரசவம் முடிந்ததும், மீண்டும் பணியில் சேருவதற்கு, அவர் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேகாலயா மாநில மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் யாங்கி கூறுகையில், ''ஒவ்வொரு பெண்ணுக்கும், குடும்ப வாழ்க்கை என்பது, அடிப்படை உரிமை. மருத்துவமனை நிர்வாகம், இந்த அடிப்படை உரிமையை மீறும் வகையில் செயல்பட்டுள்ளது; இதை, ரேச்சல் சட்ட ரீதியாக எதிர்க்கலாம்,'' என்றார்
குடும்ப பெண்களை மிரட்டி தனது காம வலையில் வீழ்த்தினார்.
எது கடமை? எது உதவி? நடிகர் சூர்யா என்ன சொல்கிறார்?